கல்வி

விஐடி சென்னை, இந்து தமிழ் திசை ‘வாழப் பிறந்தவர் நாம்’ | சென்னையில் மே 4-ல் வழிகாட்டி நிகழ்வு

செய்திப்பிரிவு

சென்னை: விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை – வாழப் பிறந்தவர் நாம்’ என்ற வழிகாட்டி நிகழ்வு வரும் 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக சியுஐசி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ்ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவைஇணைந்து வழங்குகின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தாண்டி வாழ்வில் வெற்றிபெறவும், எப்போதும் உற்சாகமாக செயல்படவும், குழப்பங்களின்றி தெளிவாக முன்னேறவும் வழிகாட்டும் வகையிலும், மாணவர்களுக்கு தெளிவையும், உறுதியையும் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில், எழுத்தாளரும், உரையாளருமான வெ.இறையன்பு, சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறப்பான கேள்விகளைக்கேட்கும் மாணவ, மாணவிகளுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் வாங்கிப் பயனடையும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள நூல்கள் அனைத்தும் 25 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் நிகழ்வரங்கில் கிடைக்கும்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/VN01 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூ ஆர் கோடு மூலமாகப்
பதிவு செய்து கொண்டு, பங்கேற்றுப் பயனைடயலாம்.

SCROLL FOR NEXT