கல்வி

விஐடி சென்னை, ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | கலை, அறிவியல் படித்தவர்கள் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள்: வல்லுநர்கள் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: கலை, அறிவியல் படித்தவர்கள் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்று விஐடி சென்னைவழங்கும் ‘இந்து தமிழ் திசை -உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழியே நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

கடந்த 27-ம் தேதி நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 3-வது தொடர் நிகழ்வில், ‘கலை மற்றும்அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் துறை சார் வல்லுநர்கள்பேசியதாவது:

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக புள்ளியியல் மற்றும் பயன்பாட்டுக் கணிதத் துறை இணைப் பேராசிரியர் சி.விஜயலட்சுமி: இன்றைய தலைமுறை மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ள படிப்புகளைத் தேர்வுசெய்து படிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இளங்கலை படிப்புகளிலும் பல புதிய படிப்புகள் சமீபகாலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகளில் உள்ள படிப்புகளைப் படித்துவிட்டு, பலர் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள்.

சென்னை சாதிக் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் எம்.ஏ.சாதிக்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. இதுஅரசுத் துறை சார்ந்த வேலைகளுக்கு தேர்வுகளை நடத்தி, உரியபணியாளர்களைத் தேர்வு செய்கிறது. இதுமட்டுமின்றி, தமிழ்நாடுயூனிஃபார்ம் சர்வீசஸ் ரெக்ரூட்மன்ட் போர்டு போன்ற அமைப்புகளும், ஆட்களைத் தேர்வு செய்கின்றன. குரூப்-1, குரூப்-2, குரூப்-3உள்ளிட்ட தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. துணை ஆட்சியர் போன்ற உயர் பதவிகளுக்கு மாநில அரசு நடத்தும் தேர்வாக குரூப்-1 தேர்வு உள்ளது,

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல்எழுத்தாளருமான டாக்டர்வி.டில்லிபாபு: 140 கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில்,ஏறத்தாழ 3.50 கோடி பேர் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கிறார்கள். இதில் 58 சதவீத மாணவர்கள் பி.ஏ., பி.எஸ்சி. படிப்புகளைப்படிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருவாரியான மாணவர்கள் படிக்கிற பி.ஏ., பி.எஸ்சி. படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

நிறைவாக, மாணவர்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதில் அளித்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://www.htamil.org/UUKE02 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உயர்வுக்கு உயர் கல்வி நிகழ்வைப் பார்த்துப் பயனடையலாம்.

SCROLL FOR NEXT