சென்னை: புதிய படிப்புகளைத் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் 130 மருத்துவக் கல்லூரிகள் எம்.என்.சி.யில் விண்ணப்பித்துள்ளன. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும், மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தவும், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் ஒப்புதல் பெறுவது அவசியம் என்றும், விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்திருந்தது.
204 விண்ணப்பங்கள்: இதையடுத்து, நாடுமுழுவதும் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்இருந்து புதிய படிப்புகளை தொடங்க 154 விண்ணப்பங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க50 விண்ணப்பங்களும் என 204 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக தேசிய மருத்துவ ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
தமிழகத்தில் போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி நிறுவனத்தில் எம்டி முதியோர் நல படிப்பு மற்றும்ஆய்வக மருத்துவப் படிப்பையும், வேலூர் சிஎம்சி கல்லூரியில் டிஎம் குழந்தைகள் சிறுநீரகவியல் படிப்பு மற்றும் எம்எஸ் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை படிப்பையும் தொடங்க விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பரிசீலனை தீவிரம்: அதேபோல், இந்த 2 மருத்துவக் கல்லூரிகளும் சில படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக் கவும் விண்ணப்பித்துள்ளன. அதற்கான ஒப்புகை தகவல், பிற விவரங்கள் இமெயில் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணிகளில் தேசிய மருத்துவ ஆணையம் ஈடுபட்டு வருகிறது.