நாகப்பட்டினம்: காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.சசிகலா(25). நாகை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். பீச் வாலிபால் வீராங்கனையான இவர், கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து, நாகை எஸ்.பி. அலுவலகத்துக்கு சசிகலாவை நேற்று வரவழைத்த எஸ்.பி ஹர்ஷ் சிங், அவருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
இதேபோல, நாகை மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தில், சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவரது மகள் ரேவதி (27). இவர் கடந்தாண்டு நடைபெற்ற உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்று, மாநில அளவில் 18-வது இடத்தைப் பிடித்து, நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, ரேவதியையும் எஸ்.பி. நேற்று வரவழைத்து, சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார்.