கோவை: அரசு இசைக் கல்லூரியில் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்பதற்காக ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, நாட்டுபுறக் கலைகளை மேம்படுத்தும் வகையில் பகுதி நேர நாட்டுபுறக் கலை பயிற்சி மையங்களை தோற்று வித்துள்ளது. கோவையில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் வெள்ளி மற்றும் சனிக் கிழமை மதியம் 1 மணி முதல் 6 மணி வரை துடும்பாட்டம், ஜிக்காட்டம், வள்ளிக் கும்மி, காவடியாட்டம் போன்ற கலைகளை பயிலுவதற்காக ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இக்கலைபயிற்சி படிப்புகளில் சேர்ந்திட பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 17 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ.500. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகத்தின் மூலம் இக்கலை பயிற்சிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2611196 அல்லது 9080578408 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.