கல்வி

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2023-24) 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கிநடைபெற உள்ளன.

இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைhttps://www.cbse.gov.in/எனும் வலைதளத்தில் சென்று மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம். அந்தவகையில் 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரையும், 12-ம்வகுப்புக்கு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல்2-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. கலைப்பாடங்கள் தவிர்த்து இதர அனைத்துதேர்வுகளும் காலை 10.30 முதல்மதியம் 1.30 மணி வரையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளை நாடு முழுவதும் சுமார் 38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT