கடலூர்: மத்திய அரசின் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆகியவை இணைந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெய்வேலியில் பள்ளி மாணவர்களுக்காக கண்காணிப்பு விழிப்புணர்வு வார விநாடி-வினாடி போட்டியை நடத்தின. இதன் இறுதிச் சுற்று நிகழ்வு நெய்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஜூனியர் பிரிவில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளிமாணவர்கள் ஜெய் பார்த்திவ், பி.வி.பிரத்யூமான், சென்னை கே.கே.நகர் பிஎஸ்பிபி பள்ளி மாணவர்கள் வி.ஆர்.அஷுதோஷ் வித்யா ஷங்கர், ரமேஷ் எஸ் கிருஷ்ணா, கோவை சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி மாணவர்கள் ஜெசித் அகர்வால், ஹேமந்தபட்டி, புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் சீனியர் செகன்டரி பள்ளி மாணவர்கள் ஆர்.அஸ்வின், பி சரண்ராஜ், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளி(சிபிஎஸ்இ) மாணவர்கள் ஜி.கமலேஷ், ஆர்எம். ராஜா சுபப்ரியன், திருச்சி ஆர்எஸ்கே மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நிஹாரிகா தீபேஷ், ஜி.ஷ்ரவந்திகா சாய் ஆகியோர் முதல் 6 இடங்களைப் பிடித்தனர்.
அதேபோல, சீனியர் பிரிவில் சென்னை கே.கே.நகர் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆர்.ஷ்யாம் சுந்தர், அர்ஜுன் வைத்தியநாதன், கோவை சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியைச் சேர்ந்தஆதித்யாரிதாய் சராப், ஆதித்யன் திவாகர் வித்யா, புதுச்சேரி செயின்ட் பேட்ரிக்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த பி.அரவிந்த், எல்.ஆண்டன்பிரின்ஸ், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் (சிபிஎஸ்இ) சேர்ந்த எஸ்.அஜய்,எஸ் ஆதித்ய விபு, திருச்சி ஆர்கேஎஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.ஜிஷ்ணு, ஆர்.வத்ஸன், மதுரை மகாத்மா மாண்டிசோரி பாபா சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த வி.நவநீத் ரெஸ்வ், பி.ராகவ்ஆகியோர் முதல் 6 இடங்களைப் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்எல்சி நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜ் பரிசு வழங்கினார். அவர் பேசும்போது, “என்எல்சி இந்தியா நிறுவனம், இந்து தமிழ்திசை இணைந்து கடந்த 7 வருடங்களாக இந்தப் போட்டியை நடத்தி வருகின்றன. இது மாணவர்களை பெரிதும் ஊக்குவிக்கிறது. இதற்காக பெற்றோர், ஆசிரியர்களுக்கு நன்றி. இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்வில், என்எல்சி நிறுவன மக்கள் தொடர்புத் துறைதுணைப் பொதுமேலாளர் கல்பனாதேவி, தலைமை மேலாளர் ஏ.அப்துல் காதர், `இந்து தமிழ்திசை' பொதுமேலாளர் டி.ராஜ்குமார், விளம்பரப் பிரிவு பொதுமேலாளர் வி.சிவக்குமார், டிஜிட்டல்விற்பனைப் பிரிவு முதுநிலை பொதுமேலாளர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், விளம்பரப் பிரிவு புதுச்சேரிபதிப்பு மண்டல மேலாளர் கௌசிக்மற்றும் என்எல்சி அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். விநாடி-வினாபோட்டியை ‘எக்ஸ் க்விஸ் இட்'க்விஸ் மாஸ்டர்கள் ஆர்.அரவிந்த், ஷ்ரவன் ஆகியோர் நடத்தினர்.