விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் மலேசிய மாணவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இயந்திர பொறியியல் துறையின் டீன் அண்ணாமலை உடனிருந்தனர். 
கல்வி

செப்.3-ம் தேதி வரை மலேசியா மாணவர்களுக்கு விஐடி சென்னையில் பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: விஐடி உயர்கல்வித் துறையில் தனி முத்திரையைப் பதித்துள்ளது. மாணவர்களுக்கு ஆராய்ச்சியுடன் கூடிய தரமான கல்வியை வழங்கி வருகிறது.

இந்நிலையில், மலேசியாவின் பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் விஐடி சென்னைக்கு பயிற்சி பெற கடந்த ஆகஸ்ட் 27-ம்தேதி வந்தனர். அவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மலேசியா மாணவர்கள் வரும் செப்.3-ம் தேதிவரை பயிற்சி பெறுகின்றனர். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் மலேசிய மாணவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, விஐடிசென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி சென்னையின் இயந்திரப் பொறியியல் துறை டீன் அண்ணாமலை உடனிருந்தனர்.

பயிற்சியில் பங்கேற்ற மலேசியா மாணவர்கள், ``இந்திய நாட்டின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் நாடு கடந்த கல்விஅனுபவத்தால் மகிழ்ச்சி அடைகிறோம். விஐடி சென்னையின் இந்த முயற்சிகளைப் பாராட்டுகிறோம்'' என்றனர்.

இந்த நிகழ்வை விஐடி சென்னையின் சர்வதேச உறவுகள் அலுவலக ஆதரவுடன் இயந்திர பொறியியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. பேராசிரியர்கள் ஆரோக்கிய செல்வகுமார் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

SCROLL FOR NEXT