குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பதக்கம் பெறும் கவுரிவாக்கம் பிரின்ஸ்  வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி மாணவி கள் சுதர்சனா, ஜி.கலையரசி. இவர்களையும் சேர்த்து 10 பேர் பல்கலைஅளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றனர் என்பது குறிப் பிடத்தக்கது. 
கல்வி

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரின்ஸ் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு தங்கப் பதக்கம்: குடியரசுத் தலைவர் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கினார்.

இதில் கவுரிவாக்கம் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் 10 பேர் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர்.

அவர்கள் விவரம் வருமாறு: கலையரசி எம்.காம், பவித்ரா பி.காம் பைனான்ஸ், சுதர்சனா பி.காம், ஸ்வேதா எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ், தவமணி எம்எஸ்சிபயோ கெமிஸ்ட்ரி, யோகலட்சுமிபிஏ ஆங்கிலம், யோகேஸ்வரன் பிசிஏ, துர்கா பிஎஸ்சி மைக்ரோபயாலஜி, லாவண்யாலட்சுமி பிஎஸ்சி பயோ டெக்னாலஜி, சித்ரா பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்.இவர்களில் சுதர்சனா, ஜி.கலையரசி ஆகிய இருவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கையால் தங்கப் பதக்கம் மற்றும்விருதுகளை பெற்றனர். மற்றவர்களுக்கு துணை வேந்தர் தங்கப்பதக்கம் மற்றும் விருது வழங்கினார்.

தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களை பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் வா.விஷ்ணுகார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேசன், கல்லூரி முதல்வர் எம்.உமா ஆகியோர் பாராட்டினர். 

SCROLL FOR NEXT