கல்வி

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 22,525 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகள், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவற்றில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2023-24-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

நேற்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால், மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்தனர். பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்புக்கு 18,746 பேரும், பி.டெக். படிப்புக்கு 3,779 பேரும் என மொத்தம் 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்: கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம்அதிகரித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் அவற்றை இணையதளம் மூலமாகவே செய்யலாம். ஜூலை 3-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்புக் கலந்தாய்வு, 7.5 சதவீத கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறும். மற்ற அனைத்து இடங்களிலும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT