கல்வி

யுபிஎஸ்சி தேர்வுக்காக படிப்பவர்களுக்கு `ராவ்’ஸ் ஐஏஎஸ் நிறுவனம் வழங்கும் திசைகாட்டி

செய்திப்பிரிவு

சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற ஓயாமல் உழைத்து வருபவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கி, வேண்டிய தகவல்களை வழங்கி வருகிறது ராவ்’ஸ் ஐஏஎஸ் நிறுவனம்.

1953-ம் ஆண்டுமுதல் 70 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கும், சிறந்த ரேங்க்களை பெறுவதற்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் நாட்டின் சிறந்த ஐஏஎஸ் பயிற்சி மையங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது. ஐஏஎஸ் அனைத்து தேர்வுகளுக்குமான வகுப்பறை பயிற்சியை வழங்குவது மட்டுமல்லாமல், விருப்பப் பாடத் தேர்வு, நேர்முகத் தேர்வுக்கான வழிகாட்டல் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது.

சிவில் சர்வீஸுக்கு படிப்பவர்களுக்கு அறிவு வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் ராவ்’ஸ் ஐஏஎஸ் திசைக்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தினசரி நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், வீடியோ பகுப்பாய்வுகளைக் காணவும் முடியும். அனைத்து பாடங்களில் பல்வேறு தலைப்புகளில் விரிவான தொகுப்புகள் இதில் உள்ளன. வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் சார்ந்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 10 ஆண்டுகால தொடக்க, முதன்மை தேர்வுகளுக்கான கேள்வித் தொகுப்புகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள கேள்விகளின் நுணுக்கங்களை ஆராய்ந்து படித்து தேர்வுக்குத் தயாராக இது உறுதுணையாக இருக்கும். இவ்வாறு ராவ்’ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT