பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற தருமபுரி மாவட்ட மாணவி மகாலட்சுமி தன் பெற்றோருடன். 
கல்வி

பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் - 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்ட மாணவி மாநில முதலிடம்

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தருமபுரி மாவட்ட மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று (26-ம் தேதி) வெளியிட்டார். இந்த பட்டியலின்படி, நடப்பு ஆண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவ, மாணவியரில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த மாணவியின் தந்தை சீனிவாசன் தருமபுரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். தாய் சுஜாதா இல்லத்தரசி. மகாலட்சுமி, தருமபுரியில் செயல்படும் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்றார். பிளஸ் 2 பயிலும்போது தருமபுரி அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும், பிளஸ் 2 முடித்த பின்னர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 579 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT