சென்னை: ஃபிட்ஜி (FIITJEE) கல்வி நிறுவனம் ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு 2023 தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சியடையச் செய்து மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளது. இவ்வெற்றி மாணவர்களின் மனதில் மீண்டும் ஒரு முதன்மை நிறுவனமாக ஃபிட்ஜியை நிலை நிறுத்தியுள்ளது.
ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு என்பது நாட்டின் மிகவும் மதிப்புவாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதற்கான திறவுகோலாகும். இத்தேர்வு மாணவர்களின் அறிவு, பகுப்பாய்வுத் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன்களைச் சோதிக்கும் தேர்வாகும்.
இத்தேர்வில் ஃபிட்ஜி மாணவரான ரிஷிகல்ரா அகில இந்திய அளவிலான பட்டியலில் 3-ம் இடம் பெற்றுள்ளார். பிரபவ் கந்தெல்வால் 6-ம் இடமும், மலய் கேடியா 8-ம் இடமும் பெற்றுள்ளனர். தேசிய பட்டியலில் முதல் 100 இடங்களில் ஃபிட்ஜி வகுப்பறை திட்டங்களில் படித்த 32 பேரும், வகுப்பறை அல்லாத திட்டங்களில் படித்த 37 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை மையங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தியுள்ளன. ராமச்சந்திரன் சம்பத் தேசிய அளவில் 52-ம் இடமும், கே.ஆர்.கேயன் 66-ம் இடமும், ரிஷப் நாராயணன் 82-ம் இடமும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஃபிட்ஜி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களின் வெற்றிப் பயணத்தில் பங்கேற்றதற்காக பெருமை கொள்வதாக ஃபிட்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஃபிட்ஜியில் பயின்று ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள்.