சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) கூட்டம், 23-ம் தேதி மாலை 3 முதல் 4.30 வரை நடத்தப்பட உள்ளது.
இதில் பள்ளி வளர்ச்சிப் பணிகள், மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் எஸ்எம்சி குழுவில் உள்ள சமூக ஆர்வலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுத்து அறிக்கையாக இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.