கல்வி

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பிஎச்டி படிப்புகளில் உள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி “ஆன்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்” என்று பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT