பொன்னேரி: எண்ணூர், தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 2½ வயது பெண் குழந்தைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர், குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் கடந்த 23-ம் தேதி எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவ்விசாரணையில், எண்ணூர், தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), கடந்த அக். 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குழந்தையை தன் வீட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று ரஞ்சித்குமாரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.