கொலை செய்யப்பட்ட விக்னேஷ்
சிவகங்கை: மானாமதுரை அருகே இளைஞரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு விக்னேஷ், அவரது நண்பர் முனீஸ்வரன் (24) ஆகிய இருவரும் அப்பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், இருவரையும் அரிவாளால் வெட்டியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முனீஸ்வரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் விசாரிக்கின்றனர்.