முகுந்தன், சஞ்சய்

 
க்ரைம்

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உடலை புழல் ஏரியில் வீசிய 2 சிறார் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: மது அருந்​தும்​போது ஏற்​பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்​யப்​பட்டு புழல் ஏரி​யில் வீசப்​பட்​டார்.

இச்​சம்​பவம் தொடர்​பாக 2 சிறு​வர்​கள் உட்பட 4 பேரை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்​னை, அம்​பத்​தூர் அருகே உள்ள சண்​முகபுரம், அன்னை இந்​திரா நகரை சேர்ந்​தவர்​கள் முகுந்​தன்​(23), சஞ்​சய்​(18). நண்​பர்​களான இவர்​கள் கடந்த 28-ம் தேதி இரவு, அன்னை இந்​திரா நகர் பகு​தி​யில் உள்ள புழல் ஏரிக் கரைக்கு மது அருந்​தச் சென்​றுள்​ளனர்.

இரு​வரும் மது அருந்த ஆரம்​பிக்​கும் நேரத்​தில், சஞ்​சய் தன் நண்​பர்​களான 17 வயதுடைய 2 சிறு​வர்​களை செல்​போன் மூலம் மது அருந்த அழைத்​துள்​ளார். இதையடுத்​து, சிறு​வர்​கள் இரு​வரும் அங்கு வந்​து, அவர்​களு​டன் சேர்ந்து மது அருந்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

அப்​போது முகுந்​தனுக்​கும், சஞ்​சய்க்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. அப்​போது சஞ்​சய் கத்​தி​யால், முகுந்​தனை வெட்​டிக் கொலை செய்​துள்​ளார்.

பிறகு தன் இரு நண்​பர்​கள் உதவி​யுடன், முகுந்​தனின் உடலை ஏரிக்​கரை​யில் கிடந்த பழைய துணி​களால் கட்​டி, புழல் ஏரி​யினுள் வீசி​யுள்​ளார். தொடர்ந்து சஞ்​சய் உள்​ளிட்ட 3 பேரும் தலைமறை​வாகினர்.

இந்​நிலை​யில் நேற்று காலை புழல் ஏரி​யில் சடலம் மிதப்​பதை அறிந்த புதூர் போலீ​ஸார் விரைந்து சென்று முகுந்​தனின் உடலைக் கைப்​பற்​றி, பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தொடர்ந்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர், அதன் அடிப்​படை​யில், தலைமறை​வாக இருந்த சஞ்​சய் மற்​றும் இரு சிறு​வர்​கள் என 3 பேரை கைது செய்து விசா​ரணை நடத்​தினர்.

அதில் முகுந்​தன் கொலைக்​கு, சண்​முகபுரம், பார​தி​தாசன் நகரை சேர்ந்த ஹரி​கிருஷ்ணன் (23) என்​பவரும் தூண்​டு​கோலாக இருந்​தது தெரிய​வந்​தது. ஆகவே ஹரி​கிருஷ்ணனை​யும்​ போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT