க்ரைம்

வெறும்​ 400 ரூபாய்​ கடனை திருப்​பி தராத​தால்​ இளைஞரை கொன்​று வீடியோ வெளி​யீடு: டெல்​லியில்​ 3 சிறு​வர்​கள்​ கைது

செய்திப்பிரிவு

புதுடெல்​லி: டெல்​லி​யில்​ 400 ரூபாய்​ கடனைத்​ திருப்​பித்​ தராத விவ​காரத்​தில், 26 வயது இளைஞரை கொன்று வீடியோ வெளியிட்ட 3 சிறு​வர்​கள் கைது செய்யப்பட்டனர்​.

இது குறித்​து வடகிழக்​கு டெல்​லி காவல்​ துணை ஆணை​யர்​ ஆஷிஷ் மிஸ்​ரா கூறிய​தாவது: வடகிழக்​கு டெல்​லி​யின்​ நியூ முஸ்​த​பா​பாத்​ பகு​தி​யைச்​ சேர்ந்​தவர்​ முகமது கைஃப்​ (26). இவருக்​குப்​ பெற்​றோர்​ மற்​றும்​ இரண்​டு சகோ​தரர்​கள்​ உள்​ளனர்​. இதே பகுதியைச்​ சேர்ந்​த 16 வயதுடைய மூன்​று சிறு​வர்​களிடம்​ கைஃப்​ 400 ரூபாய்​ கடன்​ வாங்​கிய​தாகக்​ கூறப்​படு​கிறது.

          

இந்​தக்​ கடனைத்​ திருப்​பித்​ தரு​வ​தில்​ அவர்​களுக்​கு இடையே நீண்ட நாட்​களாகத்​ தகராறு இருந்​துள்​ளது. இந்​நிலை​யில்​, கடந்​த வெள்​ளிக்​ கிழமை மாலை 4 மணி​யள​வில்​ தயாள்​பூர்​ பகு​தி​யில்​ உள்​ள 25 அடி சாலை​யில்​ கைஃப்​ சென்​று​ கொண்​டிருந்​த போது அவரை வழிமறித்​த அந்​த மூன்​று சிறு​வர்​கள்​, அவரிடம்​ தகராறில்​ ஈடு​பட்​டுள்​ளனர்​. வாக்​கு​வாதம்​ முற்​றவே அவர்​கள்​ மறைத்​து வைத்​திருந்​த கத்​தி​களால்​ கைஃபை சரமாரி​யாகக்​ குத்​தினர்​.

ரத்​த வெள்​ளத்​தில்​ சரிந்​த கைஃப்​ மீட்​கப்​பட்​டு ஜகத்​ பிர​வேஷ் சந்திரா மருத்​து​வ​மனைக்​குக்​ கொண்​டு செல்​லப்​பட்​டார்​. ஆனால்​, அவர்​ ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள்​ தெரி​வித்​தனர்​. இந்​தக்​ கொடூரச்​ சம்​பவத்​தை அந்​தச்​ சிறு​வர்​கள்​ தங்​களது கைப்​பேசி​யில்​ வீடியோ​வாகப்​ பதிவு செய்​துள்​ளனர்​. மேலும்​, சமீபத்​தில்​ வெளி​யான ஒரு திரைப்​படத்​தின்​ வசனத்​தை தலைப்​பாக வைத்​து அந்​த வீடியோவை சமூக வலை​தளங்​களி​லும்​ அவர்​கள்​ பதிவேற்​றி​யுள்​ளனர்​.

இது தொடர்​பான வீடியோ வைரலானதைத்​ தொடர்ந்​து போலீஸார்​ வி​சா​ரணை​யைத்​ தீவிரப்​படுத்​தினர்​.இதையடுத்​து, இந்​தக்​ கொலை தொடர்​பாக வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டு மூன்று சிறு​வர்​கள்​ கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​. வி​சா​ரணை​யில்​, தங்​களிடம்​ வாங்​கிய 400 ரூபாயை திருப்​பித்​ தராத​தால்​ கைஃபை கொலை செய்​த​தாக அவர்​கள்​ ஒப்​புக்​கொண்​டனர்​. அவர்களிடமிருந்​து கொலைக்​குப்​ பயன்​படுத்​தப்​பட்​ட 3 கத்​தி​கள்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு ஆஷிஷ் மிஸ்​ரா தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT