கோப்புப் படம்

 
க்ரைம்

வண்ணாரப்பேட்டையில் போதை ஊசி செலுத்தியதால் இளைஞர் மரணம்?

செய்திப்பிரிவு

சென்னை: வண்ணாரப்பேட்டையில் இளைஞர் மரணம் அடைந்​தார். அவர், போதை ஊசி செலுத்​திக் கொண்​ட​தால் இறந்​தா​ரா? அல்​லது வேறு ஏதேனும் காரணம் உள்​ள​தா? என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

பழைய வண்​ணாரப்​பேட்டை வீட்டு வசதி வாரியக் குடி​யிருப்பு மாடல் லைன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆகாஷ் (24). இவர், தனது மனைவி சங்​கீ​தாவுடன் அண்​மை​யில் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டின் காரண​மாக, அவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்​தார்.

ஆகாஷூக்கு கஞ்​சா, போதை மாத்​திரை, போதை ஊசி நுகரும் பழக்​கம் இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் ஆகாஷ், நேற்று முன்​தினம் வீட்​டில் திடீரென மயங்கி விழுந்​தார்.

இதைப் கண்டு அவரது குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர். உடனடி​யாக அவரை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ஆகாஷ் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

இதுகுறித்து வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, நடத்திய விசா​ரணை​யில், சம்​பவத்​தின்​போது ஆகாஷ் போதை ஊசியை உடலில் செலுத்​திக் கொண்​டதும், அதன் காரண​மாக உடல்​நிலை பாதிக்​கப்​பட்டு மயங்கி விழுந்து உயி​ரிழந்​திருப்​பதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இருப்​பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்​னரே ஆகாஷ் இறப்​புக்​கான உண்​மை​யான காரணம் தெரிய​வரும் என அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT