க்ரைம்

சென்னை | பிஎம்டபிள்யூ காரை ரூ.5 லட்சத்துக்கு அடமானம் வைத்து மோசடி செய்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பி.எம்​.டபிள்யூ காரை அடமானம் வைத்து மோசடி​யில் ஈடு​பட்ட நபரை போலீ​ஸார் கைது செய்​தனர். ஆலந்​தூர் ஹாஜி தெரு​வைச் சேர்ந்​தவர் ஹாஜா நஜி​முதீன் (42).

இவர் பழைய கார்​களை விற்பனை செய்கிறார். இவரிடம் கடந்த 3 ஆண்​டு​களாக ஆதம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கார்த்தி​கேயன் (35) என்​பவர் கார்​களை வாங்​கும் வாடிக்​கை​யாள​ராக இருந்து வரு​கிறார்.

இந்நிலையில் ஹாஜா நஜி​முதீன் தனது பிஎம்டபிள்யூ காரை ரூ.10 லட்​சத்​துக்கு கார்த்​தி​கேயனிடம் விற்​பனை செய்ய ஒப்​பந்​தம் செய்​துள்​ளார். இதற்​கு முன்​பண​மாக ரூ.1 லட்​சத்தை கார்த்​தி​கேயன் கொடுத்​துள்​ளார்.

கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி பிஎம்​டபிள்​யூ காரை கார்த்​தி​கேயன் பெற்​றுக் கொண்​டார். மீத ​முள்ள ரூ.9 லட்​சத்தை பின்​னர் தரு​வ​தாக கூறி​விட்​டுச் சென்​றார். ஆனால், பலமுறை கேட்​டும் மீத​முள்ள பணத்தை கார்த்​தி​கேயன் கொடுக்​க​வில்​லை.

இதனால், சந்​தேகம் அடைந்த ஹாஜா நஜி​முதீன், செல்​போன் செயலி மூலம் தனது காரின் இருப்​பிடத்​தைக் கண்​காணித்​தார். பின்​னர் ஆரணி பகு​திக்​குச் சென்று விசா​ரித்​த​போது, அந்த காரை கார்த்​தி​கேயன், விக்​னேஷ் என்​பவரிடம் ரூ.5 லட்​சத்​துக்கு அடமானம் வைத்​திருப்​பது தெரிய​வந்​தது.

தன்னை ஏமாற்​றியது தொடர்​பாக ஹாஜா நஜி​முதீன் புனித தோமையர்​மலை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​த​தில், புகாரில் கூறப்​பட்ட தகவல்​கள் உண்மை என தெரிய​வந்​ததைத் தொடர்ந்​து, கார்த்​தி​கேயனை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும், ஆரணி பகு​தி​யில் இருந்து ஹாஜா நஜி​முதீனின் பி.எம்​.டபிள்​யூ. கார் மீட்​கப்​பட்​டது. போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், ‘கைது செய்​யப்​பட்ட கார்த்​தி​கேயன் மீது ஏற்​கெனவே 4 மோசடி வழக்​கு​கள் இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT