சிவகங்கை: சிவகங்கை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பசாமி (26), 2022-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதில் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி ரோகிணி விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜராகி வாதாடினார். இதில் கருப்பசாமிக்கு 61 ஆண்டு சிறை, ரூ.4,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.