க்ரைம்

டெல்​லி​யில் ஸ்லீப்​பர் பேருந்தில் பெண் பாலியல் வன்​கொடுமை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யின் பிதாம்​புரா பகு​தி​யைச் சேர்ந்த 30 வயது பெண் ஒரு​வர் மங்​கோல்​புரி பகு​தி​யில் பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த திங்​கட்​கிழமை இரவு வேலை முடிந்​ததும் வீட்​டுக்கு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

வழி​யில் சரஸ்​வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிறுத்​தம் அருகே ஸ்லீப்​பர் கோச் பேருந்து ஒன்று நிறுத்​தப்​பட்​டிருந்​தது. அப்​போது அப்​பெண்ணை ஒருவர் கட்​டாய​மாக பேருந்​துக்​குள் இழுத்துச் சென்​றுள்​ளார். பிறகு அப்​பெண்ணை பேருந்து ஓட்​டுநர், நடத்​துநர் ஆகிய இரு​வரும் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இது தொடர்பாக அப்​பெண் அளித்த வாக்​கு மூலத்​தின் அடிப்படையில் பிஎன்​எஸ் சட்​டத்​தின் கீழ் வழக்கு வழக்​குப் பதிவு செய்​த போலீஸார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT