க்ரைம்

சென்னை | காதலனுக்காக ஐபோன் திருடிய பெண் கைது

செய்திப்பிரிவு

சென்னை: திரு​மங்​கலத்​தில் உள்ள வி.ஆர். மாலில் ரிலை​யன்ஸ் டிஜிட்​டல் நிறு​வனம் செயல்​படு​கிறது. இங்கு விற்​பனை​யாள​ராக உள்ள மாதேஷ் என்பவரை கடந்த 14-ம் தேதி சரண்யா என்ற பெண் தொடர்பு கொண்​டு, கிரெடிட் கார்டு மூலம் 2 ஐபோன்​கள் வாங்க விரும்​புவ​தாகத் தெரி​வித்​தார்.

இதையடுத்து மறு​நாள் (15-ம் தேதி) மதி​யம், சரண்யா கூறிய இடத்துக்கு மாதேஷ் சென்​று 2 ஐபோன்கள், ஓர் ஆப்​பிள் ஏர்​பாட்ஸை வழங்​கி​னார். அதை தனது தாயாரிடம் வீடியோ கால் மூலம் காண்​பித்​து​விட்டு வரு​வ​தாகக் கூறி, ஐபோன்​களு​டன் சென்ற சரண்யா திரும்பி வரவில்​லை.

தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த மாதேஷ் அமைந்​தகரை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவு​கள், செல்​போன் எண் ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தி நீல​கிரி மாவட்​டம் கொளப்​பள்ளி கிராமத்​தைச் சேர்ந்த சரண்யா பிரியா (28) என்​பவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் சரண்யா பிரியா பிசி​யோதெரபி உதவி​யாளர் படிப்பை முடித்​து​விட்​டு, சென்​னை​யில் தங்கி மருத்து​வ​மனை​களில் வேலை தேடி வந்​தது தெரிந்​தது.

மேலும் தனது காதலனுக்காக, இந்த நூதனத் திருட்​டில் ஈடு​பட்​டு, திருடிய ஐபோன், ஆப்​பிள் ஏர்​பாட்ஸை அவரிடம் கொடுத்​திருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

SCROLL FOR NEXT