சுரேஷ், பாரதி

 
க்ரைம்

குமரி ரவுடி கொலையில் மனைவி, மகன் கைது

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(43). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அவரது மனைவி பாரதி (37) கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிரணி இணைச் செயலாளராக உள்ளார்.

கடந்த 23-ம் தேதி இரவு தனது வீட்டில் திடீரென சுரேஷ் இறந்து கிடந்தார். அவரது மனைவி பாரதியிடம் பூதப்பாண்டி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, உடல்நிலை சரியில்லாமல் தனது கணவர் இறந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், பிரேத பரிசோதனையில் சுரேஷ் கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, ‘குடிபோதையில் இரவு நேரத்தில் செல்போனில் பாலியல் வீடியோக்களை காட்டி துன்புறுத்தியதோடு, உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்தும் கொடுமைப்படுத்தினார்.

இதனால் எனது 14 வயது மகனும் மனதளவில் பாதிக்கப்பட்டான். எனவே, நானும், மகனும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்’ என பாரதி கூறியுள்ளார். இதையடுத்து பாரதி மற்றும் அவரது மகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT