கொலையான குமார், கைதான ரம்யா.

 
க்ரைம்

வாணியம்பாடி அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: ​வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவரை வெட்​டிக்​கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திருப்​பத்​தூர் மாவட்​டம் வாணி​யம்​பாடி அடுத்த இளை​ய நகரம் ஊராட்​சி​யைச் சேர்ந்​தவர் விவ​சாயி குமார்​(43). இவரது மனைவி ரம்​யா(35). இவர்​களுக்கு கடந்த 15 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது.

இவர்​களுக்கு 2 மகள்​களும், ஒரு மகனும் உள்​ளனர். குமாருக்கு மதுப்​பழக்​கம் இருந்​த​தால் தம்​பதி இடையே அடிக்​கடி குடும்ப தகராறு ஏற்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் நள்​ளிரவு மது போதை​யில் வீட்​டுக்கு வந்த குமார், ரம்​யா​வுடன் தகராறில் ஈடு​பட்​டார்.

இதனால், ஆவேசமடைந்த ரம்யா வீட்​டின் சமையல் அறை​யில் இருந்த கத்​தியை எடுத்து குமாரின் கழுத்​து, மார்பு பகு​தி​களில் சரமாரி​யாக வெட்​டி​னார்.

இதில், சம்பவ இடத்​திலேயே குமார் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். கணவர் உயி​ரிழந்​ததை உறுதி செய்த ரம்யா உடனடி​யாக வாணி​யம்​பாடி கிரா​மிய காவல் நிலை​யத்​துக்கு சென்று அங்கு சரணடைந்​தார்.

இதுகுறித்து தகவலறிந்த வாணி​யம்​பாடி டிஎஸ்பி மகாலட்​சுமி தலை​மையி​லான போலீ​ஸார் ரம்யா வீட்​டுக்கு சென்று அங்​கிருந்த குமாரின் உடலை கைப்​பற்றி பிரேதப் பரி​சோதனைக்​காக வாணி​யம்​பாடி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதுதொடர்​பாக, கிரா​மிய போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து ரம்​யாவை கைது செய்​தனர். இதற்​கிடையே, கொலை நடந்த இடத்தை திருப்​பத்​தூர் எஸ்​.பி., அக்​சய் அனில் வாகரே நேற்று பார்​வை​யிட்​டு வி​சா​ரணை நடத்​தி​னார்​.

SCROLL FOR NEXT