க்ரைம்

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் ஏப்.30-ம் தேதி தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: ​முத்​தி​யால்​பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்​தாண்டு மார்ச் 2-ம் தேதி வீட்​டின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென மாயமா​னார். 2 நாட்​களுக்​குப்பின் அருகே உள்ள வாய்க்​காலில் கை, கால்​கள் கட்​டப்​பட்டு போர்​வை​யால் சுற்​றப்​பட்​ட நிலையில், பிண​மாக மீட்​கப்​பட்​டார்.

இச்​சம்​பவம் புதுச்​சேரியை உலுக்​கியது. முத்​தி​யால்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அதே பகு​தி​யைச் சேர்ந்த கருணாஸ் (19), விவே​கானந்​தன் (59) ஆகியோரை போக்சோ வழக்​கில் கைது செய்​தனர். இவ்​வழக்கு தொடர்​பாக 500 பக்க குற்​றப்​பத்​திரி​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர்.

இதில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​தாண்டு செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதி​மன்​றத்​தில் நடந்து வரு​கிறது. விசா​ரணை முடிந்த நிலை​யில் வரும் 30-ம் தேதி இந்த வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்பட உள்​ளது.

SCROLL FOR NEXT