தினேஷ்கு​மார், வினித்​ராஜ்

க்ரைம்

ஆவடியில் மின் இணைப்பு பெட்டிகளில் 27 பியூஸ் கேரியர்கள் திருட்டு: இரு இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: ஆவடி, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய குடி​யிருப்பு பகு​தி​யில் துணை மின் நிலை​யம் அமைந்​துள்​ளது. இங்​கிருந்​து, ஆவடி, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய குடி​யிருப்பு பகு​தி​கள், காம​ராஜர் நகர் பகு​தி​களுக்கு மின் விநி​யோகம் செய்​யப்​பட்டு வரு​கிறது. மின் விநி​யோகத்​துக்​காக இப்​பகு​தி​களில் பல மின் இணைப்பு பெட்​டிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் காலை ஆவடி, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய குடி​யிருப்பு பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது.

இதுகுறித்​து, பொது​மக்​கள் அளித்த தகவலின் பேரில் அதி​காரி​கள் மேற்​கொண்ட ஆய்​வில், துணை மின் நிலை​யத்​தின் பின்​புற பகு​தி​யில் உள்ள மின் இணைப்பு பெட்​டி​யில் இருந்து 18 பியூஸ் கேரியர்​கள் மர்ம நபர்​களால் திருடப்​பட்​டது தெரிய வந்​தது.

அது​மட்​டுமல்​லாமல், தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய குடி​யிருப்பு, காம​ராஜர் நகர் பகு​தி​களில் உள்ள மின் இணைப்பு பெட்​டிகளில் கடந்த 10 நாட்​களில் 9 பியூஸ் கேரியர்​கள் திருடப்​பட்​டது தெரிய வந்​தது.

இதையடுத்​து, புதிய பியூஸ் கேரியர்​களை பொருத்தி மின் விநி​யோகம் சீராக அதி​காரி​கள் நடவடிக்கை எடுத்​தனர் பியூஸ் கேரியர்​கள் திருட்டு தொடர்​பாக, பட்​டாபி​ராம் உதவி செயற்​பொறி​யாளர் கார்த்தி கணேஷ் ஆவடி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன் அடிப்​படை​யில், ஆவடி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, ஆவடி, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய குடி​யிருப்பு பகு​தி​களில் உள்ள சிசிடிவியில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்​படை​யில், மின் இணைப்பு பெட்​டிகளில் இருந்து 27 பியூஸ் கேரியர்​கள் திருடப்​பட்​டது தொடர்​பாக, சென்​னை, அம்​பத்​தூர்- சூரப்​பட்டு மாத​னாங்​குப்​பம் பகு​தி​களைச் சேர்ந்த தினேஷ்கு​மார் (19), வினித்​ராஜ் (20) ஆகிய இரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைதானவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், தினேஷ்கு​மார், வினித்​ராஜ் ஆகியோர் பியூஸ் கேரியர்​களை திருடி, அதிலிருந்த காப்​பர் வயர்​களை விற்​பனை செய்​ததும், அவர்​கள் மீது சென்​னை, அண்​ணாநகர், திரு​மங்​கலம் உள்​ளிட்ட பகு​தி​களில் பியூஸ் கேரியர்​கள், இரு சக்கர வாக​னங்​கள் திருடியது தொடர்​பாக வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளதும் தெரிய வந்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

மேலும், பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​தும் வகை​யில் பியூஸ் கேரியர்​களை திருடும் குற்​றச் சம்​பவங்​களில் ஈடு​படு​பவர்​கள் மீது கடுமை​யான சட்ட நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என, ஆவடி காவல்​ ஆணை​யரகம்​ தெரிவித்​துள்ளது.

SCROLL FOR NEXT