க்ரைம்

சின்னத்திரை நடிகையை ஆபாச படம் எடுக்க முயற்சி: இரு பெண்கள், சினிமா தயாரிப்பாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சினி​மா​வில் நடிக்க போட்டோ ஷூட் எடுக்க வேண்​டும் எனக் கூறி சின்​னத்​திரை நடிகையை ஆபாச​மாக படம் எடுக்க முயன்ற இரு பெண்​கள், சினிமா தயாரிப்​பாளரை போலீ​ஸார் கைது செய்தனர்.

சாலிகி​ராமம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சின்னத்திரை நடிகை பவானி(31) (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது). இவரை, சினிமா தயாரிப்​பாளர் ஒரு​வர் செல்​போனில் தொடர்​பு​கொண்​டு, தான் ஒரு படம் தயாரிக்க உள்​ள​தாக​வும் அந்​தப் படத்​தில் உங்​களை நடிக்க வைக்க உள்​ள​தால் போட்டோ ஷூட் எடுக்க வேண்​டும் எனவும் கூறி​யுள்​ளார்.

அதற்கு நடிகை​யும் ஒப்​புக் கொண்​டதை அடுத்​து, சாலிகி​ராமம் பகு​தி​யில் உள்ள விடு​திக்கு வரு​மாறு படத்​த​யாரிப்​பாளர் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து நடிகை பவானி அந்த விடு​திக்​குச் சென்​றுள்ளார்.

அங்​கிருந்த ஒரு பெண், நடிகையை 3 போட்டோ எடுத்​து​விட்​டு, கதை​யில் சாமி வேடம் போன்ற காட்சி வரு​வ​தால், உங்​கள் உடம்​பில் எந்த காயமோ, தழும்போ இருக்​கக் கூடாது.

எனவே, உங்​கள் கண்​களை கையால் மூடிக்​கொண்டு ஆடைகளை கழட்டி போட்​டோவுக்கு போஸ் கொடுக்க வேண்​டும் என தெரி​வித்​துள்​ளனர்.

இதைக்​கேட்டு அதிர்ச்சி அடைந்த பவானி, நான் இந்த படத்​தில் நடிக்க விரும்​ப​வில்லை எனக் கூறி வெளியே வர முயன்​ற​போது சினிமா தயாரிப்​பாளர் மற்​றும் 2 பெண்​களும் தடுத்​துள்​ளனர்.

அவர்​களிடம் இருந்து தப்​பித்து வெளியே வந்த நடிகை, இந்த சம்​பவம் குறித்து விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் விரு​கம்​பாக்​கம் அனைத்து மகளிர் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​று விசா​ரணை நடத்​தினர்.

அதைத்​தொடர்ந்​து, பெருங்​குடியைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர் நந்தி ராம​நாதன்​(65), தரமணி​யைச் சேர்ந்த இந்​தி​ராணி(40), விருதுநகரைச் சேர்ந்த புகைப்​படக் கலைஞர் கார்த்​தி​கா(35) ஆகியோரைக் கைது செய்​தனர்.

3 பேரையும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். இவர்​களு​டன் தங்கி இருந்த 7 வயது சிறுமியை அடை​யாறு பகு​தி​யில்​ உள்​ள காப்​பகத்​தில்​ ஒப்​படைத்​தனர்​.

SCROLL FOR NEXT