ஆரோக்​கிய​ராஜ், சுரேஷ்

 
க்ரைம்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: திமுக நிர்வாகியின் உறவினர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் ரூ.100 கோடி மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் மேலும் 2 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் பல்​வேறு தனி​யார் பள்​ளி​களிடம் அங்​கீ​காரம், தரம் உயர்​வுக்​கான அனு​மதி போன்​றவற்றை பெற்​றுத் தரு​வ​தாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்​த​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் சாலிகி​ராமம் மெஜஸ்​டிக் காலனி​யில் வசிக்​கும் திமுக நிர்​வாகி பி.டி.அரசகு​மாரை (59) கடந்த 27-ம் தேதி சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வு போலீ​ஸார் கைது செய்​தனர்.

மதுரை, சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ஆரோக்​கிய​ராஜ் (எ) ராஜா (39), திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர் அரசகு​மாருக்கு ஆதர​வாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. இவர்​கள் அரசகு​மாரின் உறவினர்​கள் ஆவர்.

பள்​ளி​களு​டன் எந்த தொடர்​பும் இல்​லாத அவர்​கள், அரசுகு​மார் மற்​றும் அவரது கூட்​டாளி​களின் தூண்​டு​தலின்​பேரில், பள்ளி நிர்​வாகி​களை பல்​வேறு இடங்​களில் வரவழைத்து பணத்தை வசூலித்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்து இரு​வரை​யும் நேற்று கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் இது​வரை 120-க்​கும் மேற்​பட்ட பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகி​கள் உள்பட 190 பேரிடம் வி​சா​ரணை நடத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT