சென்னை: சென்னையில் வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.2.11 கோடி மோசடி செய்த பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு, இணையதளம் மூலம் 'இமயம் ஹோம்ஸ்' என்ற நிறுவனத் தின் பெயரில் வீடுகள் வாடகை மற்றும் குத் தகைக்கு இருப்பதாக விளம்பரம் வெளி யானது. இதனை நம்பி பாத்திமா பீவி என் பவர், அந்நிறுவனத்தின் உரிமையாளர் களான ஹெலன் ரோஸ் மற்றும் பிரேம்கு மார் ஆகியோரை வளசரவாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்தார்.
மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான வீட்டை, தங்களது நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு எடுத்திருந்த அவர்கள், அந்த வீட்டை பாத்திமா பீவிக்கு ரூ.7 லட்சத்துக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஹெலன் ரோஸ் மற்றும் பிரேம்கு மார் இருவரும், வீட்டின் உண்மையான உரிமையாளர் மணிகண்டனுக்கு ஒரிரு மாதங்கள் மாத வாடகை செலுத்தியதாக தெரிகிறது. அதன்பிறகு, மணிகண்டனுக்கு அவர்கள் வாடகையைச் செலுத்தவில்லை. இதனால், அவர் பாத்திமா பீவியை வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினார்.
அதன் பின்னரே, போலி நிறுவனம் நடத்தி தன் னிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்துள் ளார்கள் என்பதை உணர்ந்த பாத்திமா, சென்னை காவல் ஆணையாளர் அலு வலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவின் 'நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வுப் பிரிவு' இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தது. விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
ஹெலன்ரோஸ் மற்றும் பிரேம்குமார் இரு வரும் போலியான நிறுவனத்தைத் தொடங்கி, அதன் பெயரில் 34 வீட்டு உரிமையாளர் களிடம் இருந்து வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடுகளை மற்ற வாடிக்கையாளர்களிடம் காட்டி குத் தகைக்கு விட்டு, ரொக்கம் மற்றும் ஆன் லைன் மூலமாக சுமார் ரூ.2.11 கோடியை வசூலித்துள்ளனர்.
இந்த வழக்கில் தனிப்படை அமைத்து போலீஸார் இருவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த திருவேற்காட்டைச் சேர்ந்த ஹெலன் ரோஸ் (59) மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (50) ஆகிய இருவரை யும் நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து பல முக்கிய குத்தகை மற்றும் வாடகை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில் தமிழில் வெளியான 'கான்சிட்டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு மோசடி சம்பவ காட்சியை போலவே இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.