கத்தியால் குத்துவதற்கு முன்பு வீரா.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்த மணிகண்டன்.

 
க்ரைம்

திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி உட்பட 2 பேருக்கு கத்திக்குத்து

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வேடசந்​தூர் திமுக தெற்கு ஒன்​றியச் செய​லா​ள​ராக இருப்​பவர் வீரா.​சாமி​நாதன் (55). பைனான்ஸ் தொழில் செய்து வரு​வதுடன், பழநி அரு​கே​யுள்ள புஷ்பத்​தூரில் சிபிஎஸ்இ பள்​ளியை​யும் நடத்தி வரு​கிறார்.

வேடசந்​தூர் அருகே தமுத்​துப்​பட்​டி​யில் உள்ள பண்ணை வீட்​டில் குடும்​பத்​துடன் வசித்து வரு​ம் இவர், மதுரை​யில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்​கும் நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​வதற்​காக நேற்று காலை வீட்​டில் இருந்து காரில் புறப்​பட்​டார்.

          

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒரு​வர் காரை மறித்​து, சால்வை அணிவிக்க வேண்​டும் என்று கேட்​டுள்​ளார். காரில் இருந்து இறங்​கிய வீரா.​சாமி​நாதனுக்கு சால்வை அணி​வித்த இளைஞர், திடீரென தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் சாமி​நாதனின் கழுத்​தின் பின்​பகு​தி​யில் குத்​தி​னார்.

அப்​போது, அரு​கில் இருந்த காளனம்​பட்டி நாச்​சி​முத்து (57) இதைத் தடுக்க முயன்​றார். அவரை​யும் அந்த இளைஞர் கத்​தி​யால் குத்​தி​விட்டு, அங்கிருந்து தப்​பியோட முயன்​றார். உடனே, அரு​கில் இருந்த வீரா.​சாமி​நாதனின் ஆதவாளர்​கள் அந்த இளைஞரைப் பிடித்​து, போலீ​ஸில் ஒப்​படைத்​தனர். காயமடைந்த வீரா.​சாமி​நாதன், நாச்​சி​முத்து ஆகியோர் திண்டுக்​கல்​லில் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

3 பேரிடம் விசாரணை: போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், கத்​தி​யால் குத்​திய நபர் திண்​டுக்​கல் வெயிலடிச்​சாம்​பட்டி மணி​கண்​டன் (20) என்​பதும், வீரா.​சாமி​நாதனின் பைனான்ஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய​போது முறை​கேட்​டில் ஈடு​பட்​டதற்​காக பணி நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர் என்​பதும் தெரிய வந்​தது. இது தொடர்​​பாக மணி​கண்​டன் உள்​ளிட்ட 3 பேரிடம் போலீ​ஸார் தொடர்​ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT