க்ரைம்

பழநி மடம் நிலமோசடி வழக்கில் மேலும் இருவர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: பழநி அடிவாரம் பகுதியில் உள்ள மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திர பதிவு செய்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய பத்திரப் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற மற்றும் வாங்கிய,இடைத்தரகள் என, முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, அன்வர்தீன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய பழநி சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் சிவசங்கரி(36) மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட வழக்கறிஞர் சிவக்குமார்(46) ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து திண்டுக்கல் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT