சுரேஷ்,  பாலமுருகன்,  வினோத்

 
க்ரைம்

சிறுவனைக் கொன்று ஆட்டுப் பண்ணையில் புதைத்த வழக்கில் மேலும் இருவர் கைது

செய்திப்பிரிவு

திருத்​தணி: முரு​கம்​பட்டு கிராமத்​தில் சிறு​வனைக் கொன்று ஆட்டுப் பண்ணையில் புதைத்த வழக்​கில் மேலும் இரு​வரை நேற்று போலீ​ஸார் கைது செய்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்​தணி அருகே முருக்​கம்​பட்டு பகு​தி​யில், திருத்​தணி, எம்​. ஜி.ஆர்​.நகர் பகு​தியை சேர்ந்த பால​முரு​கன் ஆடு மற்​றும் கோழி பண்ணை நடத்தி வந்​தார்.

இங்கு பணிபுரிய திருத்​தணி, இந்​திரா நகரை சேர்ந்த வினோத், கடந்த 8 மாதங்​களுக்கு முன்பு தன் உறவின​ரான வெண்​ணிலா மற்​றும் அவரது 3 மகன்​களை அனுப்பி வைத்​துள்​ளார். அங்கு வெண்​ணிலா, தன் 3 மகன்​களு​டன் தங்​கி, ஆடு மேய்க்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​துள்​ளார்.

இதற்​கிடையே கடந்த 4 மாதங்​களுக்கு முன் வெண்​ணிலா​வின் மூத்த மகன் சுரேஷ் (15), சரிவர ஆடு மேய்க்​க​வில்லை எனக் கூறி, அவரை ஆட்டு பண்ணை உரிமை​யாளர் பால​முரு​கன் கடுமை​யாக தாக்​கிய​தில் சுரேஷ் உயி​ரிழந்​துள்​ளார்.

இதையடுத்து பால​முரு​கன், வெண்​ணிலா​வின் உறவினர் வினோத்​தின் உதவி​யுடன், சுரேஷின் உடலை பண்ணை வளாகத்​தில் புதைத்​து​விட்​டு, யாருக்​கும் சந்​தேகம் வராத வகை​யில் அதன் மேல் சிமென்ட் தரை போல் பூசி மறைத்​துள்​ளார்.

இதுகுறித்​து, சுரேஷின் தாய் வெண்​ணிலா கடந்த 10-ம் தேதி அளித்த புகாரின் பேரில், திருத்​தணி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். அதன் அடிப்​படை​யில், நேற்று முன் தினம் பால​முரு​கன், வினோத் இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

தொடர்ந்​து, பண்​ணை​யில் புதைக்​கப்​பட்ட சுரேஷின் உடல் பொக்​லைன் இயந்​திரம் மூலம் தோண்​டி​யெடுக்​கப்​பட்​டு, வரு​வாய்த் துறை​யினர் மற்​றும் போலீ​ஸார் முன்​னிலை​யில், திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை குழு​வின​ரால் பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டது.

மேலும், போலீ​ஸார் நடத்​திய தீவிர விசா​ரணை​யில், சுரேஷ் கொலைக்​கு, பால​முரு​கன் மனைவி புவனா (40), அவரது மகளான 15 வயது சிறுமி ஆகியோரும் உடந்​தை​யாக இருந்​தது தெரியவந்​தது.

இதையடுத்​து, இந்த வழக்​கில், நேற்று புவ​னா, 15 வயது சிறுமியை போலீ​ஸார் கைது செய்​தனர். இதில், சிறுமி காவல் நிலைய முன்​ஜாமீனில் விடப்​பட்​டார். தொடர்ந்​து, ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்ட பால​முரு​கன், வினோத், புவனா ஆகியோரை போலீ​ஸார்​ நேற்​று நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி சிறையில்​ அடைத்​தனர்​.

SCROLL FOR NEXT