கைதானவர்கள்.

 
க்ரைம்

சென்னை | பைக்கில் பின்தொடர்ந்து வந்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை தாக்கி ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: டிராவல்ஸ் நிறுவன உரிமை​யாளரைத் தாக்கி ரூ.2 லட்​சம் வழிப்​பறி செய்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சேப்​பாக்​கம், மசூதி தெரு​வில் வசித்து வருபவர் முகமது உபேஸ் (38). திரு​வல்​லிக்​கேணி, அருணாச்​சலம் தெரு​வில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

இவர் கடந்த 9-ம் தேதி இரவு, சென்​னை, பர்மா பஜாரில் உள்ள தனது நண்​பரிட​மிருந்து ரூ.2 லட்​சத்தை கடனாக வாங்​கி​னார். பின்​னர் அதை பையில் வைத்​துக் கொண்டு பைக்​கில் அலு​வல​கம் திரும்​பி​னார்.

அலு​வல​கத்​தில் பைக்கை நிறுத்​தும் நேரத்​தில் அவரை ஏற்​கெனவே பின் தொடர்ந்து வந்த வழிப்​பறி கொள்​ளை​யர்​கள் இரு​வர் முகமது உபேஸை தாக்கி அவரிட​மிருந்த பணத்தை வழிப்​பறி செய்​து​விட்டு தப்​பினர். இது தொடர்​பாக திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் முகமது உபேஸை தாக்கி வழிப்​பறி செய்​தது கொருக்​குப்​பேட்​டை, திரு​நாவுக்​கரசு தோட்​டம் பகு​தி​யைச் சேர்ந்த நாக​ராஜ் (25), தண்​டை​யார்​பேட்டை சுனாமி குடி​யிருப்​பைச் சேர்ந்த நிதிஷ்கு​மார் (20) என்​பது தெரிந்​தது.

இதையடுத்து தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் தனிப்​படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இதையடுத்​து, இரு​வரும் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT