க்ரைம்

காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்த விவகாரம்: கூடங்குளம் போலீஸார் 2 பேர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கூடங்​குளம் காவல் நிலை​யத்​தில்இளைஞர் பூச்சி மருந்து குடித்த சம்​பவத்​தில், போலீ​ஸார் இரு​வர்பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திருநெல்​வேலி மாவட்​டம் காவல்​கிணறு பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரமேஷ்கு​மார் (32). இவர் நேற்று முன்​தினம் மாலை​யில் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்​த​தாக கூடங்​குளம் போலீ​ஸாரிடம் பிடிபட்​டார். அவரை கூடங்​குளம் தலை​மைக் காவலர் சிவகு​மார், காவலர் வேல்​துரை ஆகி​யோர், அவரை காவல் நிலை​யம் அழைத்​துச் வந்த​னர்.

அப்போது திடீரென ரமேஷ் கு​மார் தனது பையில் வைத்​திருந்த பூச்​சிக்​கொல்லி மருந்தை குடித்​ததாக தெரிகிறது இதையடுத்து அவர் நாகர்​கோ​வில் ஆசா​ரிப்​பள்​ளம் அரசு மருத்​து​வ​மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்​சம்​பவம் குறித்து எஸ்​பி விஷ்வேஷ் பா.​சாஸ்​திரி விசா​ரணை நடத்தி, பணி​யில் கவனக்​குறை​வாக இருந்​த​தாக, தலை​மைக் காவலர் சிவகு​மார், காவலர் வேல்​துரை ஆகிய இரு​வரை​யும் பணி​யிடைநீக்​கம் செய்து உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT