சதீஸ் குமார், கார்த்​தி​கேயன்

 
க்ரைம்

சென்னை | தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வீடு புகுந்து தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி தப்​பிய இரு இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

அசோக் நகர், இந்​திரா காலனி 4-வது அவென்​யூவைச் சேர்ந்​தவர் பிரபு சீனி​வாஸ் (53).

இவரது வீட்​டில் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்று வந்​த​தால், அவர் அண்ணா நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்​டில் தங்கி வந்​தார்.

கடந்த 24-ம் தேதி மாலை புனரமைப்பு பணி​களை முடித்து தொழிலா​ளர்​கள் சென்ற பின், மறு​நாள் காலை மீண்​டும் பணிக்கு வந்த தொழிலா​ளர்​கள் வீட்டை திறந்து பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த சுமார் 40 கிராம் எடை​யுள்ள கவரிங் ஆரம், செல்​போன் மற்​றும் வீட்​டில் பொருத்​தப்​பட்​டிருந்த 6 பித்​தளை பைப்​பு​கள், குழாய்​கள் ஆகியவை மர்ம நபர்​களால் திருடப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து பிரபு சீனி​வாஸ் குமரன் நகர் காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தார். அதன் பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், பிரபு சீனி​வாஸ் வீட்​டில் திருட்​டில் ஈடு​பட்​டது வடபழனி ஒத்​த​வாடை தெரு​வைச் சேர்ந்த கார்த்​தி​கேயன் (20), எம்​.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஸ் குமார் (20) என்​பது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். விசா​ரணை​யில், இரு​வரும் வீட்​டின் பின்​வாசல் வழி​யாக நள்​ளிர​வில் உள்ளே புகுந்து தங்க நகை என நினைத்து கவரிங் நகையை திருடியதும், போகும்​போது செல்​போன் மற்​றும் பித்​தளை பைப்​பு​களை திருடிச் சென்​றதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்​து, இரு​வரும் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT