கஞ்சா கடத்தியது தொடர்பாக இருவரை கைது செய்த ரயில்வே போலீஸார்

 
க்ரைம்

விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்: சென்னையில் 2 இளைஞர்கள் கைது

மு.வேல்சங்கர்

சென்னை: ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தியது தொடர்பாக இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், ஆர்பிஎஃப் போலீஸார் இணைந்து வியாழக்கிழமை மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து பெரம்பூர் வழியாக போத்தனூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வந்தது. இதில் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் பைகளை சோதித்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு, ரூ.2 லட்சம் ஆகும்.

இதையடுத்து, அவர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த தனமாலி போய் (19), கேரளாவைச் சேர்ந்த முகமது ஷபிக் (26) ஆகியோர் என்பதும், ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT