மனோகரன்​, கவுதம்

 
க்ரைம்

கோவூரில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது: 500 மாத்திரைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஆவடி: போரூர், குன்​றத்​தூர், மாங்​காடு உள்​ளிட்ட பகு​தி​களில் போதை மாத்​திரைகள் விற்​கப்​படு​வ​தாக மாங்​காடு போலீ​ஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்​படை​யில், நேற்று கோவூர் தைலந்​தோப்பு அருகே கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்டு இருந்​தனர்.

அப்​போது அங்கே சந்​தேகத்​துக் ​கிட​மான வகை​யில் நின்​றிருந்த 2 பேரை பிடித்து போலீ​ஸார் விசா​ரித்​தனர். அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதிலளித்​துள்​ளனர்.

இதையடுத்து அவர்​கள் வைத்​திருந்த பையை சோதனை செய்​த​போது அதில் போதை மாத்​திரைகள் இருந்​தது தெரிய​வந்​தது. போலீ​ஸார் இரு​வரை​யும் கைது செய்து அவர்​களிடம் இருந்து 500 போதை மாத்​திரைகளை பறி​முதல் செய்​தனர்.

விசா​ரணை​யில் அவர்​கள்

பெரும்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த கவுதம் (24), மாங்​காடு, பொன்​னாம்​பாள் நகரைச் சேர்ந்த மனோகரன்​(21) என்​பதும், போதை மாத்​திரைகளை மும்​பையி​லிருந்து வாங்கி வந்து விற்​பனை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து மாங்​காடு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT