கார்த்​திக், கோகுல​கிருஷ்ணன்

 
க்ரைம்

பக்ரீத் சலுகை என்ற பெயரில் குறைந்த விலையில் செல்போன் விற்பதாக மோசடி செய்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பக்ரீத் சலுகை என்ற பெயரில் குறைந்த விலை​யில் செல்​போன் விற்​ப​தாக பண மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்​டர் தோட்​டம் எல்​லீஸ் ரோடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் செல்​வ​நாதன் (32). இவர் கடந்த மே மாதம் 25-ம் தேதி முகநூலை பார்த்​துக் கொண்​டிருந்​த​போது, பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு குறைந்த விலை​யில் செல்​போன்​கள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக விளம்​பரம் ஒன்று வந்​தது.

அதில், ரூ.28 ஆயிரம் மதிப்​புள்ள செல்​போன் ரூ.22 ஆயிரத்​துக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இதை நம்​பிய செல்​வ​நாதன், செல்​போனை வாங்​கு​வதற்​காக ரூ.22 ஆயிரத்தை இணை​ய​வழி​யில் செலுத்​தி​னார்.

அடுத்த வாரம் செல்​போன் டெலிவரி செய்​யப்​படும் என அவருக்கு தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால், ஒரு வாரம் கடந்​தும் செல்​போன் வரவில்​லை. விளம்​பரத்​தில் கொடுக்​கப்​பட்​டிருந்த இணை​யதள முகவரியை தொடர்​பு​கொள்ள முயன்​ற​போது அது போலி​யானது என்​பது தெரிய​வந்​தது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த செல்​வ​நாதன், திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்​து, திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

மேலும், திரு​வல்​லிக்​கேணி மாவட்ட சைபர் க்ரைம் போலீ​ஸாரும் இணைந்து நவீன தொழில்​நுட்ப உதவி​யுடன் மோசடி கும்​பலை தேடினர்.

விசா​ரணை​யின் அடிப்​படை​யில், குரோம்​பேட்​டையைச் சேர்ந்த கார்த்​திக் (35), மேட​வாக்​கம் ஜல்​லடியன்​பேட்​டையைச் சேர்ந்த கோகுல​கிருஷ்ணன் (32) ஆகிய 2 பேரை கடந்த 28-ம் தேதி போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து மோசடிக்கு பயன்​படுத்​திய 4 செல்​போன்​கள் மற்​றும் ஒரு லேப்​டாப் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

போலீஸ் விசா​ரணை​யில், கார்த்​திக் செல்​போன் உதிரி​பாகங்​கள் சப்ளை செய்​யும் தொழில் செய்து வந்​ததும், கோகுல​கிருஷ்ணன் மாடம்​பாக்​கத்​தில் செல்​போன் மற்​றும் லேப்​டாப் சர்​வீஸ் கடை நடத்தி வந்​ததும் தெரிய​வந்​தது.

இவர்​கள் இரு​வரும் இணைந்து முகநூல், இன்​ஸ்​டாகி​ராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களில் குறைந்த விலை​யில் செல்​போன்​கள் விற்​பனை செய்​வ​தாக கவர்ச்​சிகர​மான விளம்​பரங்​களை வெளி​யிட்​டு, பொது​மக்​களிடம் இருந்து பணத்​தைப் பெற்று மோசடி செய்​ததும் வி​சா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இரு​வரும்​ நேற்​று முன்​தினம்​ சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT