க்ரைம்

முதல்வர் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சாலைத் தடுப்புகளை சேதப்படுத்திய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: முதல்​வர் விஜய், பெரம்​பூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 13-ந் தேதி நடை​பெற்ற பல்​வேறு அரசு மற்​றும் பொது​நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார்.

இதையொட்​டி, பாது​காப்பு ஏற்​பாடு​களின் ஒரு பகு​தி​யாக வியாசர்​பாடி எருக்​கஞ்​சேரி பிர​தான சாலை, சாஸ்​திரி நகர் மார்க்​கெட் எதிரே போக்​கு​வரத்து போலீ​ஸார் இரும்பு சாலைத் தடுப்​பு​களை அமைத்து போக்​கு​வரத்தை ஒழுங்​குபடுத்​தினர்.

நிகழ்ச்​சிகள் முடிந்த பின்​னரும் சில தடுப்​பு​கள் அந்த பகு​தி​யில் அகற்​றப்​ப​டா​மல் இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த நிலை​யில், கடந்த செவ்​வாய்க்​கிழமை 3 பேர் அந்த சாலைத் தடுப்​பு​களை வலுக்​கட்​டாய​மாக இடித்​துத் தள்ளி சேதப்​படுத்​தினர்.

இதை அங்​கிருந்​தவர்​கள் செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டனர். இந்த வீடியோ வேக​மாக பரவிய நிலை​யில், அதைப் பார்த்த காவல்​துறை உயர் அதி​காரி​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

அரசு பாது​காப்பு பணிக்​காக வைக்​கப்​பட்​டிருந்த தடுப்​பு​களை சேதப்​படுத்​தி​ய​வர்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்​கு​மாறு எம்​.கே.பி. நகர் போலீ​ஸாருக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்​து, சமூக வலை​தளங்​களில் வெளி​யான வீடியோ காட்​சிகளை ஆதா​ர​மாகக் கொண்டு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கண்​காணிப்பு கேமரா காட்​சிகள் மற்​றும் வீடியோ பதிவு​களின் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தி​ய​தில், சம்​பவத்​தில் ஈடு​பட்​டது வியாசர்​பாடி சர்மா நகர் பகு​தி​யைச் சேர்ந்த வீரக்​கு​மார் (28), நாகப்​பட்​டினத்​தைச் சேர்ந்த ரஜினீஸ் (25) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, 2 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், சம்​பவத்​தில் தொடர்​புடைய மற்​றொரு நபரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT