க்ரைம்

சென்னை | தொழில் நிறுவன உரிமையாளரிடம் கடனை திரும்ப கேட்டு காரில் கடத்தி தாக்கிய இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கடனை திரும்​பக் கேட்டு தொழில் நிறுவன உரிமை​யாளரை காரில் கடத்தி தாக்​கிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

வளசர​வாக்​கம், எம்​.ஜி.சக்​கர​பாணி நகரில் வசித்து வருபவர் சுரேஷ்கு​மார் (34). ஒன்​றரை ஆண்​டு​களாக ரெடிமேடு காம்​பவுண்டு சுவர் தயாரிக்​கும் தொழில் செய்து வரு​கிறார்.

          

தொழில் வளர்ச்​சிக்​காக கடந்த ஜனவரி மாதம் நெற்​குன்​றத்​தைச் சேர்ந்த பாலாஜி (32) என்​பவரிடம் ரூ.2.10 லட்​சம் கடன் பெற்​றுள்​ளார்.

பின்​னர், கடந்த மாதம் வரை​யில் பல்​வேறு தவணை​களாக ரூ.1 லட்​சத்து 10 ஆயிரம் கொடுத்​துள்​ளார்.

மீத​முள்ள பணத்தை செலுத்​த​வில்​லை. எனவே பாலாஜி கடந்த 11-ம் தேதி தனது நண்​பருடன் சுரேஷ்கு​மாரின் வீட்​டுக்​குச் சென்று பணத்தை கேட்​டுள்​ளார். அப்​போது இரு தரப்​பினரிடையே தகராறு ஏற்​பட்​டது.

இதனால் கோபம் அடைந்த பாலாஜி இரும்​புக் கம்​பி​யால் சுரேஷை தாக்கி காரில் கடத்​தி​னார். பின்​னர் போகும் வழி​யிலும் அடித்து பணம் கேட்​டார். இதையடுத்து சுரேஷ்கு​மார் தனது பழைய முதலாளி விஜயகு​மார் என்​பவரிட​மிருந்து ஜிபே மூலம் ரூ.50 ஆயிரம் பெற்று பாலாஜிக்கு அனுப்​பி​யுள்​ளார்.

இதையடுத்து மீத​முள்ள ரூ.50 ஆயிரத்தை ஒரு வாரத்​தில் தர வேண்​டும் எனக்​கூறி காரிலிருந்து கீழே தள்​ளி​விட்டு தப்​பினர்.

காயம் அடைந்த சுரேஷ் கு​மார் சிகிச்​சைக்​குப் பின்​னர் மதுர​வாயல் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, காரில் கடத்தி தாக்​கிய பாலாஜி, அவரது கூட்​டாளி​யான சென்னை ஆழ்​வார் திருநகரைச் சேர்ந்த நரசிம்​மன் (31) ஆகிய இரு​வரைக் கைது செய்​தனர்​.

SCROLL FOR NEXT