க்ரைம்

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: தவெக வட்டச் செயலாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையை சேர்ந்த சிறுமி கோடை விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நாளன்று வீட்டு முன்பு அந்த சிறுமி விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்​போது, அதே பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ் (30), சிறுமி​யிடம் ஆசை​வார்த்தை கூறி தனது வீட்​டுக்கு அழைத்​துச் சென்று பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதுபற்றி வெளியே சொன்​னால் கொலை செய்து விடு​வ​தாக சிறுமியை அவர் மிரட்​டிய​தாக​வும் தெரி​கிறது. இதனால் பயந்​து​போன சிறுமி, சில நாட்​கள் அமை​தி​யாக இருந்​துள்​ளார். இந்​நிலை​யில், நடந்த சம்​பவத்தை பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்​ளார். இது குறித்து சிறுமி​யின் பெற்​றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரின் பேரில், புகாருக்கு உள்​ளான தவெக வட்​டச் செய​லா​ளரான தினேஷை போக்சோ சட்​டத்​தின்​கீழ் போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது.

SCROLL FOR NEXT