க்ரைம்

வேறு சிறைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புழல் சிறையில் திருநங்கைகள் ரகளை

செய்திப்பிரிவு

சென்னை: புழல் சிறையி​லிருந்து வேறு சிறைக்கு மாற்​று​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்து திருநங்கை கைதி​கள் ரகளை​யில் ஈடு​பட்​டதோடு பொருட்​களை​யும் சூறை​யாடினர்.

சென்னை புழல் மத்​திய சிறை​யில் ஆண் மற்​றும் பெண் கைதி​கள் என 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விசா​ரணை, தண்​டனைக் கைதி​கள் அடைத்து வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

குறிப்​பாக பெண்​கள் சிறை​யில் பல்​வேறு குற்ற வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்ட பெண் மற்​றும் திருநங்​கைகள் என 150 பேர் உள்​ளனர்.

இவர்​களில் எண்​ணூரை சேர்ந்த திருநங்கை அபி, செம்​மஞ்​சேரியை சேர்ந்த சுஜி மற்​றும் அயனாவரத்​தைச் சேர்ந்த சஞ்​சனா ஆகிய 3 திருநங்​கைகளை நிர்​வாக காரணங்​களுக்​காக புழல் சிறை அதி​காரி​கள் வேலூர் மற்​றும் திருச்சி சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்​துள்​ளனர்.

இதனால் ஆத்​திரமடைந்த அந்த 3 பேரும் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து சிறைக்​குள்​ளேயே நேற்று முன்​தினம் திடீரென தர்​ணா​வில் ஈடு​பட்​டதோடு, ரகளை​யிலும் ஈடு​பட்​டனர்.

மேலும், சிறை​யில் உள்ள தொலைபேசி, ஸ்கேனர், டியூப் லைட் உள்​ளிட்ட பொருட்​களை அடித்து நொறுக்​கி, பதிவேடு​களை கிழித்​தெறிந்​தனர். அதோடு மட்​டுமல்​லாமல் சிறை அதி​காரி​களுக்கு எதி​ராக கோஷமிட்டு தங்​களது ஆடைகளை அகற்றி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என புழல் சிறை அதி​காரி​கள் புழல் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​பேரில் 3 திருநங்​கைகள் மீதும் அரசு சொத்​துகளை சேதப்​படுத்​துதல், ஆபாச​மாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT