க்ரைம்

கடம்பத்தூர் அருகே ரயில் மோதி கல்லூரி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு - போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

கடம்பத்தூர் அருகே ரயில் மோதி கல்லூரி மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பழைய வெண்மனம்புதூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (55). இவரது மகள் ஹரிதா (17). இவர், திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் தினந் தோறும் கல்லூரிக்கு கடம்பத்தூரில் இருந்து ரயில் மூலம் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், ஹரிதா நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப் போது அவர் செல்போனில் பேசிக் கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் வரு வதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சற்று தள்ளி நின்று உள்ளார்.

ஆனால், அதற்குள் விரைவு ரயில் அவரை உரசிக் கொண்டு சென்றது. இதனால் பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடினார். அருகில் இருந்துவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிரசிகிச்சை அளித்தும், சிகிச்சைபலன ளிக்காமல் ஹரிதா பரிதாபமாக உயி ரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திரு வள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து: அதேபோல, திருவள்ளூர் அடுத்த செஞ்சி பானம்பாக்கம்-கடம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்கமுயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து, அரக் கோணம் ரயில்வே போலீஸார் இறந்த வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT