க்ரைம்

வேலை தேடி சென்னை வந்தபோது சோகம்: மெரினாவில் மூழ்கி இளைஞர் பரிதாப உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வேலை தேடி சென்னை வந்த சேலம் இளைஞர் மெரினாவில் மூழ்கி உயி​ரிழந்​துள்​ளார். சேலம் மாவட்​டம், பாறைப்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்​தவர் தயானந்​தன் (29). இவர், கடந்த 16-ம் தேதி சேலத்​தில் இருந்து வேலை தேடி சென்னை வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் மெரினா கடற்​கரை​யில் மாற்​றுத் திற​னாளி​கள் நடை​பாதை அருகே பேக்​கில் செல்​போன், மணி பர்​ஸ், ஆகிய​வற்றை கரை​யில் வைத்​து​விட்​டு, கடலில் குளித்​துள்​ளார்.

          

அப்​போது எதிர்​பா​ராத வித​மாக, கடல் அலை​யில் சிக்​கி, ஆழமான பகு​தி​யில் இழுத்​துச் செல்​லப்​பட்​ட​வர் சிறிது நேரத்​தில் சடல​மாக கரை ஒதுங்​கி​னார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்​கிருந்​தவர்​கள் உடனடி​யாக போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். மெரினா போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து தயானந்​தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

போலீஸார் விசாரணை

தயானந்​தன் கடலில் குளிக்​கும்​போது அலை​யில் சிக்கி உயி​ரிழந்​தா​ரா? அல்​லது மெரினா​வில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டா​ரா? என போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT