க்ரைம்

திருநெல்வேலி: குடிநீர் பிரச்சினையில் வாக்குவாதம் - ஊராட்சித் தலைவர் கொலை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்​டம் வள்​ளியூர் அருகே குடிநீர் பிரச்​சனைக்​காக நடந்த வாக்​கு​வாதத்​தில் ஊராட்​சித் தலை​வர் மகா​ராஜன் (55), செங்​கல்​லால் அடித்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வள்​ளியூர் அருகே கண்​ணநல்​லூர் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் மகா​ராஜன். இவர் சுயேச்​சை​யாக போட்​டி​யிட்டு ஊராட்​சித் தலை​வ​ராக வெற்றி பெற்​றவர்.

அங்​குள்ள தாமரைகுளம் பகு​தி​யில் மகா​ராஜன் நேற்று இரவு சென்​ற​போது, கண்​ணநல்​லூர் பகு​தி​யில் கடந்த ஒரு வார​மாக குடிநீர் விநி​யோகம் இல்லை என அப்​பகு​தி​யில் வசிக்​கும் இசக்கி பாண்​டியன் என்​பவர் புகார் கூறி​யுள்​ளார். இதுதொடர்​பாக இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

வாக்​கு​வாதம் முற்​றிய நிலை​யில், அப்​பகு​தி​யில் கட்​டு​மானப் பணிக்​காக குவித்து வைக்​கப்​பட்​டிருந்த செங்​கல்லை எடுத்து மகா​ராஜனை, இசக்கி பாண்​டியன் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதில் படு​காயமடைந்த மகா​ராஜன், நாங்​குநேரி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யிலேயே உயி​ரிழந்​தார். இச்​சம்​பவம் குறித்து வள்​ளியூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இது அப்​பகு​தி​யில் பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT