விஜய்குமார்

 
க்ரைம்

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 இளைஞர்கள் மரணம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்​பலூர் அருகே நேற்று லாரி மீது கார் மோதிய விபத்​தில் 3 இளைஞர்​கள் உயி​ரிழந்​தனர்.

சென்னை பெரம்​பூர் பாரதி நகரைச் சேர்ந்​தவர் சங்​கர் (37). அரியலூர் மாவட்​டம் அரி​சானத்​தம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் விஜய்​கு​மார் (30). சன்​னாநல்​லூரைச் சேர்ந்​தவர் சக்தி (21). இவர்​கள் 3 பேரும் தனி​யார் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வந்தனர். இந்​நிலை​யில், பணி நிமித்​த​மாக ஈரோட்​டுக்​குச் சென்​று​விட்​டு, நேற்று முன்​தினம் இரவு 3 பேரும் காரில் அரியலூர் நோக்கி திரும்​பிக்​கொண்​டிருந்​தனர். காரை சக்தி ஓட்​டி​னார்.

பெரம்பலூர் டி.களத்​தூர் பிரிவு சாலை​யில் வந்​த​போது, கட்​டுப்​பாட்டை இழந்​த கார் சாலையின் மைய தடுப்​புச் சுவரில் ஏறி, எதிரே வந்த லாரி மீது மோதி​யது. இதில், 3 பேரும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்தனர். தொடர்ந்​து, அக்​கம்​பக்​கத்​தினர் இடி​பாடு​களில் சிக்​கிய 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டனர். தகவலறிந்து வந்த பெரம்​பலூர் ஊரக போலீ​ஸார், உடல்​களை​ பரிசோதனைக்​காக பெரம்​பலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​னர். காரை ஓட்டி வந்த சக்தி கண் அயர்ந்​த​தால் கார் கட்​டுப்​பாட்டை இழந்து விபத்​துக்​குள்​ளானதாக போலீ​ஸார் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT