க்ரைம்

மின்சாரம் தாக்கியதில் தம்பதி உள்ளிட்ட 3 பேர் ஆத்தூரில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் ஆத்​தூரில் மின்கம்பி அறுந்​து​விழுந்து கணவன், மனைவி மற்​றும் கல்​லூரி மாணவர் உயி​ரிழந்​தனர்.

ஆத்​தூர் அக்​ரஹாரத்​தைச் சேர்ந்​தவர் கருப்​பையா (41). கொத்​த​னார். இவரது மனைவி சுதா (37). இவர்​கள் அப்​பகு​தி​யில் உள்ள மாடி வீட்​டில் குடி​யிருந்து வந்​தனர். நேற்று முன்​தினம் இரவு பலத்த காற்​றுடன் மழை பெய்​த​தால் வீட்​டு மாடி​யில் மின் கம்பி அறுந்து விழுந்​தது.

இதை அறி​யாமல் கருப்​பையா அதை மிதித்​த​தால் மின்​சா​ரம் பாய்ந்​தது. இவரின் அலறல் சத்​தம் கேட்டுவந்த மனைவி சுதா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களை காப்பாற்ற கீழ் வீட்டில் இருந்து வந்த கல்​லூரி மாணவர் சுப்​பிரமணிய சிவா (18) மீதும் மின்​சா​ரம் பாய்ந்த​து. இதில் 3 பேரும் நிகழ்​விடத்​திலேயே உயி​ரிழந்​தனர். இதுகுறித்து செம்​பட்டி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT