க்ரைம்

விருத்தாசலம் | சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: திருச்​சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை​யில், கடலூர் மாவட்​டம் ராமநத்​தம் அடுத்த லக்​கூர் பகு​தி​யில் தனி​யார் வேளாண்​மைக் கல்​லூரி செயல்​பட்டு வரு​கிறது.

இக்​கல்​லூரி​யில் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த தரணிசெல்​வன் (20), சிதம்​பரம் நிஷாந்த் (20), திரு​வண்​ணா​மலை விநாயகமூர்த்தி (20), செங்​கம் சசிக்​கு​மார் (20), திண்​டிவனம் மேல்​பாக்​கம் ராஜேஷ் (18), திருச்சி மாவட்​டம் லால்​குடி மதுப்​பிரியன் (19) ஆகியோர் பி.எஸ்​சி. பயின்று வந்​தனர்.

          

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை அவர்​கள் 6 பேரும் காரில் எழுத்​தூர் அருகே சென்​ற போது, திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார், எதிர்​பா​ராத​வித​மாக சாலை​யின் தடுப்​புக் கட்​டை​யில் மோதி, எதிர் திசை​யில் வந்​து​கொண்​டிருந்த சுற்​றுலாப் பேருந்து மீது மோதி விபத்​துக்​குள்​ளானது.

இதில் காரில் பயணித்த தரணிச்​செல்​வன், விநாயகமூர்த்​தி, நிஷாந்த் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், ராஜேஷ், மதுப்​ரியன், சசிக்​கு​மார் ஆகியோர் படு​காயமடைந்​தனர். தகவலறிந்து சம்பவ இடத்​திற்கு வந்த போலீ​ஸார் காயமடைந்​தவர்​களை மீட்​டு, பெரம்​பலூர் மாவட்ட அரசு மருத்​து​வ​மனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பி வைத்​தனர்.

SCROLL FOR NEXT